பொண்ணுக்குத் தங்க மனசு படத்தில் ஜி.கே.வெங்கடேஷ் இசையில் எஸ்.பி.பி., எஸ். ஜானகி அவர்களால் பாடப்பெற்ற பாடல். பாடலை எழுதியவர் கவிஞர் கண்ணதாசன். பாடல் வரிகளும், இசையும் நன்றாக இருக்கும் என்பதால் எனக்கு இந்த பாடல் பிடிக்கும். கமல்ஹாசன், சிவகுமார், ஜெயசித்ரா நடிப்பில், 1973-ஆம் வருடம் வெளிவந்த படம் பொண்ணுக்குத் தங்க மனசு. நான் ரசித்த இந்த பாடல் இதோ உங்களுக்காய்!
தேன் சிந்துதே வானம்... உனை... எனை..... தாலாட்டுதே.....
மேகங்களே தரும் ராகங்களே...... எந்நாளும் வாழ்க
பன்னீரில் ஆடும் செவ்வாழை கால்கள்
பனிமேடை போடும் பால் வண்ண மேனி
பனிமேடை போடும் பால் வண்ண மேனி
கொண்டாடுதே சுகம் சுகம்...பருவங்கள் வாழ்க
தேன் சிந்துதே வானம்... உனை... எனை..... தாலாட்டுதே......
மேகங்களே தரும் ராகங்களே...... எந்நாளும் வாழ்க
வைதேகி முன்னே ரகு வம்ச ராமன்
விளையாட வந்தான் வேறென்ன வேண்டும்
விளையாட வந்தான் வேறென்ன வேண்டும்
சொர்க்கங்களே வரும் தரும்...சொந்தங்கள் வாழ்க
தேன் சிந்துதே வானம்... உனை... எனை..... தாலாட்டுதே......
கண்ணோடு கண்கள் கவி பாட வேண்டும்
கையோடு கைகள் உறவாட வேண்டும்
கன்னங்களே இதம் பதம்...காலங்கள் வாழ்க
தேன் சிந்துதே வானம்... உனை... எனை..... தாலாட்டுதே
மேகங்களே தரும் ராகங்களே...... எந்நாளும் வாழ்க