Sunday 8 May 2011

அம்மா என்றழைக்காத உயிரில்லையே

அம்மா என்றழைக்காத உயிரில்லையே – இந்த பாடலை ரசிக்காதவர்களே என்று சொல்லலாம். யாருக்குத்தான் தனது அம்மாவினை பிடிக்காது. வாலி எழுதிய பல பாடல்களில் எனக்குப் பிடித்த பாடல்களில் இதுவும் ஒன்று. ரஜினிக்காக கே.ஜே.யேசுதாஸ் குரல் கொடுத்த பாடல், இளையராஜாவின் இசையில், அன்னையர் தினமான இன்று உங்களது ரசனைக்கு.

பாடலின் விவரங்கள் கீழே.

படம்: மன்னன்
பாடகர்: கே.ஜே.யேசுதாஸ்.
நடிகர்கள்: ரஜினி.
பாடல் வரிகள்: வாலி
இசை: இளையராஜா
படம் வெளிவந்த வருடம்: 1992

பாடலைக் கேட்க:


Get Your Own Hindi Songs Player at Music Plugin

பாடலைக் காண:



பாடல் வரிகள்:

அம்மா என்றழைக்காத உயிரில்லையே
அம்மாவை வணங்காது உயர்வில்லையே
அம்மா என்றழைக்காத உயிரில்லையே
அம்மாவை வணங்காது உயர்வில்லையே
நேரில் நின்று பேசும் தெய்வம்
பெற்ற தாயன்றி வேறொன்று ஏது
அம்மா என்றழைக்காத உயிரில்லையே
அம்மாவை வணங்காது உயர்வில்லையே

அபிராமி சிவகாமி கருமாயி மகமாயி
திருக்கோயில் தெய்வங்கள் நீதானம்மா
அன்னைக்கு அன்றாடம் அபிஷேகம் அலங்காரம்
புரிகின்ற சிறுத்தொண்டன் நான்தானம்மா
பொருளோடு புகழ் வேண்டும் மகனல்ல தாயே உன்
அருள் வேண்டும் எனக்கென்றும் அது போதுமே
அடுத்திங்கு பிறப்பொன்று அமைந்தாலும் நான் உந்தன்
மகனாகப் பிறக்கின்ற வரம் வேண்டுமே
அதை நீயே தருவாயே

அம்மா என்றழைக்காத உயிரில்லையே
அம்மாவை வணங்காது உயர்வில்லையே

பசும் தங்கம் புது வெள்ளி மாணிக்கம் மணிவைரம்
அவை யாவும் ஒரு தாய்க்கு ஈடாகுமா
விலை மீது விலை வைத்துக் கேட்டாலும் கொடுத்தாலும்
கடைதன்னில் தாயன்பு கிடைக்காதம்மா
ஈரைந்து மாதங்கள் கருவோடு எனைத்தாங்கி
நீ பட்ட பெரும்பாடு அறிவேனம்மா
ஈரேழு ஜென்மங்கள் எடுத்தாலும் உழைத்தாலும்
உனக்கிங்கு நான் பட்ட கடன் தீருமா
உன்னாலே பிறந்தேனே

அம்மா என்றழைக்காத உயிரில்லையே
அம்மாவை வணங்காது உயர்வில்லையே
நேரில் நின்று பேசும் தெய்வம்
பெற்ற தாயன்றி வேறொன்று ஏது
அம்மா என்றழைக்காத உயிரில்லையே
அம்மாவை வணங்காது உயர்வில்லையே
அம்மா என்றழைக்காத உயிரில்லையே
அம்மாவை வணங்காது உயர்வில்லையே

6 comments:

  1. கேட்கக்கேட்க தெவிட்டாத இனிமையான அர்த்தமுள்ள அருமையான பாடல். எனக்கு மிகவும் பிடித்த பாடல். பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  2. அன்னையர் நாளுக்கான பாடல் . நன்றி

    ReplyDelete
  3. மிகவும் அருமையானபாடல் பதிவுக்கு நன்றி

    ReplyDelete
  4. கேட்கக்கேட்க தெவிட்டாத இனிமையான அர்த்தமுள்ள அருமையான பாடல். எனக்கு மிகவும் பிடித்த பாடல்.
    subbu rathinam

    ReplyDelete
  5. பொருத்தமான பாடல்,அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  6. கேட்கத் தெவிட்டாத பாடல்..

    ReplyDelete