Thursday 10 February 2011

மாசிலா உண்மை காதலே


மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரிப்பில், டி.ஆர். சுந்தரம் இயக்கத்தில் 1956-ல் வெளிவந்த படம் அலிபாபாவும் 40 திருடர்களும். எம்.ஜி.ஆர்., பானுமதி, பி.எஸ். வீரப்பா ஆகியோர் நடித்து வெளிவந்த இந்த படத்தில் நான் மிகவும் ரசித்த பாடல்களில் ஒன்றான ”மாசிலா உண்மைக்காதலே”. எம்.ஜி.ஆர்., பானுமதி இருவரும் போட்டு இருக்கும் தொளதொளவென்று இருக்கும் உடைகள் – ”வாவ்” சொல்ல வைக்கும் :) KETHIRAPALU என்கிற நபரால் இந்த ரசித்த பாடலின் காணொளி  YOUTUBE-இல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அவருக்கு எனது வணக்கங்கள். இந்த பாடலைப் பாடியவர்கள் ஏ.எம்.ராஜா மற்றும் பானுமதி. இசையமைப்பாளர் – எஸ். தக்ஷிணாமூர்த்தி. நான் ரசித்த பாடல் இதோ உங்கள் ரசனைக்கு…..



ஏ.எம். ராஜா:

மாசிலா உண்மை காதலே
மாறுமோ செல்வம் வந்த போதிலே
மாசிலா உண்மை காதலே
மாறுமோ செல்வம் வந்த போதிலே

பானுமதி:

பேசும் வார்த்தை உண்மைதானா
பேதையை ஏய்க்க நீங்கள் போடும் வேஷமா
பேசும் வார்த்தை உண்மைதானா
பேதையை ஏய்க்க நீங்கள் போடும் வேஷமா

ஏ.எம். ராஜா:

கண்ணிலே மின்னும் காதலை
கண்டுமா சந்தேகம் எந்தன் மீதிலே

நெஞ்சிலே நீங்கிடாது கொஞ்சும் இன்பமே

பானுமதி:

நிலைக்குமா இந்த எண்ணம் எந்த நாளுமே

ஏ.எம். ராஜா:

நெஞ்சிலே நீங்கிடாது கொஞ்சும் இன்பமே

பானுமதி:

நிலைக்குமா இந்த எண்ணம் எந்த நாளுமே

பேசும் வார்த்தை உண்மைதானா
பேதையை ஏய்க்க நீங்கள் போடும் வேஷமா

மாசிலா உண்மை காதலே
மாறுமா செல்வம் வந்த போதிலே

ஏ.எம். ராஜா:

கண்ணிலே மின்னும் காதலை
கண்டுமா சந்தேகம் எந்தன் மீதிலே

உனது ரூபமே உள்ளம் தன்னில் வாழுதே

பானுமதி:

இனிய சொல்லினால் எனது உள்ளம் மகிழுதே

ஏ.எம். ராஜா:

உனது ரூபமே உள்ளம் தன்னில் வாழுதே

பானுமதி:

இனிய சொல்லினால் எனது உள்ளம் மகிழுதே

ஏ.எம். ராஜா, பானுமதி:

அன்பினாலே ஒன்று சேர்ந்தோம்
இங்கு நாம் இன்ப வாழ்வின் எல்லை காணுவோம்
அன்பினாலே ஒன்று சேர்ந்தோம்
இங்கு நாம் இன்ப வாழ்வின் எல்லை காணுவோம்

மாசிலா உண்மை காதலே
மாறுமோ செல்வம் வந்த போதிலே
மாசிலா உண்மை காதலே
மாறுமோ செல்வம் வந்த போதிலே… மாறுமோ….



7 comments:

  1. எல்லோருக்குமே அனேகமாக இந்தப் பாட்டுப் பிடித்திருக்கும். MGR & பானுமதி உடைகளும் வித்யாசமாக இருக்கும். முதலில் வந்த கலர் படம் என்றும் கேள்விப்பட்டிருக்கிறேன். நானும் இந்தப் படத்தை பார்த்திருக்கிறேன். நல்ல படம் & நல்ல பாட்டு.
    இண்ட்லியின் போய். 6 ஐ 7 ஆக்கி விட்டேன். பதிவுக்கும், தகவலுக்கும் நன்றி.

    ReplyDelete
  2. என்ன ஒரு நாசூக்கான காதல் பாடல் இது..:)

    ReplyDelete
  3. என்னத் தல ரொம்ப ஓல்டா போயிட்டீங்க...

    ஓல்டா இருந்தாலும் கோல்ட்... பகிர்வுக்கு நன்றி!! ;;-)
    ஆனால் இந்த மெட்டும் ஏ.எம். ராஜா குரலும் மெஸ்மரைஸ் செய்யக் கூடியது. ;-)

    ReplyDelete
  4. @@ வை. கோபாலகிருஷ்ணன்: தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

    @@ முத்துலெட்சுமி: இந்தக்காலம் போல இல்லை! தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

    @@ ஆர்.வி.எஸ்.: அட பழைய பாட்டின் ரசிகன் அவ்வளவு தான் நண்பரே. இந்த படம் வந்தபோது நானே இல்லை, இன்னும் சொல்லப் போனால் என் அப்பாவிற்கே கல்யாணம் ஆகவில்லை! உங்களைவிடவே சின்னவனா இருந்தாலும் இருப்பேன். அத இங்க பேச வேண்டாம். தனியா அலைபேசியில பேசிக்கலாம்! தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
  5. பாடல்களை நினைக்கவும், ரசிக்கவும், போற்றவும் அதை மற்றவர்களுக்கு வழங்கவும் செய்திடும் நல்லுள்ளம் கொண்ட வெங்கட் அவர்களே,
    என் உள்ளம் கவர்ந்த பல பாடல்களில இதுவும் ஒன்று. சிறந்த விரசமில்லாத நடிப்பு. பழைய பாடல்களில் இனிமையோடு கருத்தாழமும் இருக்கும்.தொலை பேசியில் வேண்டாம், நான் பெரிசு கூறுகிறேன் "கேள்வி- பதில் " பாட்டில் பொதிந்திருக்கும் சிறப்புகளை, சிறியவர், பெரியவர் கேட்டு (இதுவரை பழக்கப் படுதிக்கொள்ளதவ்ரும்) பயன் அடையுங்கள் .
    ௧. கொண்டவளை நேசியுங்கள்.
    ௨. உண்மையாக நேசியுங்கள்.
    ௩. உருவத்தினை உள்ளத்தில் பதியுங்கள்.
    ௪. அந்த காதலை, கண்களினால், பேசும் மொழிகளினால், செய்யும் செயல்களினால் என்பது போன்ற வழிகளில் தெரியப்படுத்துங்கள் .
    ௫. சந்தேகம் என்ற தீய குணம் உள்ளத்தினை மாசுபடுத்த விட்டிடாதீர்கள்.
    ௬. எந்த நிலையிலும் இவற்றிலிருந்து மாறாதீர்கள்.

    இவற்றை கடைப்பிடியுங்கள். வாழ்க்கையில் என்றும் சந்தோஷம் நிலைத்திருக்கும். அதற்கு எங்கள் வாழத்துக்கள்.
    மந்தவெளி நடராஜன்.

    ReplyDelete
  6. அருமையான பாடல்.பகிர்வுக்கு மகிழ்ச்சி.நன்றி.

    ReplyDelete
  7. வருடக்கணக்கிலாச்சு இந்தப் பாட்டைக் கேட்டு. நன்றி

    ReplyDelete