Sunday 27 February 2011

தேன் சிந்துதே வானம்...

பொண்ணுக்குத் தங்க மனசு படத்தில் ஜி.கே.வெங்கடேஷ் இசையில் எஸ்.பி.பி., எஸ். ஜானகி அவர்களால் பாடப்பெற்ற பாடல். பாடலை எழுதியவர் கவிஞர் கண்ணதாசன். பாடல் வரிகளும், இசையும் நன்றாக இருக்கும் என்பதால் எனக்கு இந்த பாடல் பிடிக்கும். கமல்ஹாசன், சிவகுமார், ஜெயசித்ரா நடிப்பில், 1973-ஆம் வருடம் வெளிவந்த படம் பொண்ணுக்குத் தங்க மனசு. நான் ரசித்த இந்த பாடல் இதோ உங்களுக்காய்!


தேன் சிந்துதே வானம்... உனை... எனை..... தாலாட்டுதே.....
மேகங்களே தரும் ராகங்களே...... எந்நாளும் வாழ்க

பன்னீரில் ஆடும் செவ்வாழை கால்கள்
பனிமேடை போடும் பால் வண்ண மேனி
பனிமேடை போடும் பால் வண்ண மேனி
கொண்டாடுதே சுகம் சுகம்...பருவங்கள் வாழ்க

தேன் சிந்துதே வானம்... உனை... எனை..... தாலாட்டுதே......
மேகங்களே தரும் ராகங்களே...... எந்நாளும் வாழ்க

வைதேகி முன்னே ரகு வம்ச ராமன்
விளையாட வந்தான் வேறென்ன வேண்டும்
விளையாட வந்தான் வேறென்ன வேண்டும்
சொர்க்கங்களே வரும் தரும்...சொந்தங்கள் வாழ்க

தேன் சிந்துதே வானம்... உனை... எனை..... தாலாட்டுதே......
கண்ணோடு கண்கள் கவி பாட வேண்டும்
கையோடு கைகள் உறவாட வேண்டும்
கன்னங்களே இதம் பதம்...காலங்கள் வாழ்க

தேன் சிந்துதே வானம்... உனை... எனை..... தாலாட்டுதே
மேகங்களே தரும் ராகங்களே...... எந்நாளும் வாழ்க


10 comments:

  1. I also like this song. Particularly the manner in which SPB has sung this.

    ReplyDelete
  2. அருமையான பாடல்.
    தேனாக இனித்தது.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. உங்க பக்கம் வந்தால் அருமையான பாடல்கள்கிடைக்கும். நன்றி

    ReplyDelete
  4. //பனிமேடை போடும் பால் வண்ண மேனி//
    இந்த இடத்தில அண்ணன் ஒரு ஆட்டு ஆட்டிடுவாறு.. கேட்க கேட்க இன்பம்.. அற்புதமான பாடல்... பகிர்வுக்கு நன்றி தல. ;-)

    ReplyDelete
  5. இனிமையான பாடல்.. :) அடிக்கடி முணுமுணுக்கும் வரிகள் அந்த ஆரம்ப வரிகள்..

    ReplyDelete
  6. பாடல்களை தேர்ந்தெடுத்து போடுவது அருமை.ரசித்து கேட்டேன்.

    ReplyDelete
  7. @@ மோகன்குமார்: தங்கள் வருகைக்கும் நான் ரசித்த பாடலை ரசித்தமைக்கும் மிக்க நன்றி நண்பரே.

    ## வை. கோபாலகிருஷ்ணன்: தங்கள் வருகைக்கும் ரசித்தமைக்கும் மிக்க நன்றி ஐயா.

    @@ லக்ஷ்மி: ஏதோ என்னால் இயன்றதோர் முயற்சி. தங்கள் வருகைக்கும் ரசித்தமைக்கும் மிக்க நன்றி அம்மா.

    ## ஆர்.வி.எஸ்.: எஸ்.பி.பி. அண்ணாச்சிக்கு குழைக்கவும், பாடலை மெருகேற்றவும் சொல்லித்தரணுமா என்ன! அற்புதமான பாடகர். தங்கள் வருகைக்கும் ரசித்தமைக்கும் மிக்க நன்றி நண்பரே.

    @@ முத்துலெட்சுமி: ரசித்தமைக்கு மிக்க நன்றி சகோ.

    ## ஆசியா உமர்: உங்களுக்கும் இந்த பாடல் பிடித்ததா. ரசித்தமைக்கு மிக்க நன்றி சகோ.

    இண்ட்லியில் வாக்களித்து இந்த பதிவினை பிரபலமாக்கிய அனைத்து நண்பர்களுக்கும் நன்றி.

    ReplyDelete
  8. //I also like this song. Particularly the manner in which SPB has sung this.//

    வழிமொழிகிறேன்.

    ReplyDelete
  9. The other actor besides Sivakumar was Vijaya Kumar and not Kamalahasan.

    ReplyDelete
  10. அருமையான பாடல். நன்றி. இந்தப் பாடல் இடம் பெற்ற படம் பொண்ணுக்கு தங்க மனசு. இப் படத்தில் சிவகுமார், விஜயகுமார் நடித்தார்கள். விஜயகுமாரின் முதலாவது படம் இது. கமலஹாசன் இதில் நடிக்கவில்லை. ஆனால் சிவகுமாரும் கமலஹாசனும் சேர்ந்து நடித்த படம் ஒன்றின் பெயர் “தேன் சிந்துதே வானம்” அந்தப் படத்தில் தான் உன்னிடம் மயங்குகிறேன் என்ற இனிமையான பாடல் இடம்பெற்றது.

    ReplyDelete