Sunday 30 January 2011

ரகுபதி ராகவ ராஜாராம்

இன்று மகாத்மா காந்தி கோட்சேவின் துப்பாக்கிக் குண்டிற்கு பலியான தினம்.  சுசீலா அம்மாவின் குரலில் அவருக்கு அஞ்சலி. 



ரகுபதி ராகவ ராஜாராம்
பதீத பாவன சீதாராம்

ரகுபதி ராகவ ராஜாராம்
பதீத பாவன சீதாராம்

ஈஸ்வர் அல்லா தேரோநாம்    
சப்கோ சன்மதி தே பகவான்
ஈஸ்வர் அல்லா தேரோநாம்    
சப்கோ சன்மதி தே பகவான்
ஈஸ்வர் அல்லா தேரோநாம்    
சப்கோ சன்மதி தே பகவான்

ரகுபதி ராகவ ராஜாராம்
பதீத பாவன சீதாராம்
ஈஸ்வர் அல்லா தேரோநாம்    
சப்கோ சன்மதி தே பகவான்
ஈஸ்வர் அல்லா தேரோநாம்    
சப்கோ சன்மதி தே பகவான்

ரகுபதி ராகவ ராஜாராம்
பதீத பாவன சீதாராம்


Friday 28 January 2011

காஞ்சி பட்டுடுத்தி…..

எனக்கு 7 வயசு இருக்கும்போது வந்த படம் வயசு பொண்ணு [1978]. ஆனாலும் இந்த பாடல் நான் முதலில் கேட்டது ஒன்பதாவது-பத்தாவது படிக்கும்போது இருக்கலாம். ஆனாலும் இப்பவும் இந்தப் பாடல் எனக்குப் பிடித்த பாடல்களில் ஒன்று. பாடலாசிரியர்: நா. முத்துலிங்கம். பாடலுக்கு இசை: எம்.எஸ். விஸ்வநாதன். பாடகர்கள்: கே.ஜே.யேசுதாஸ், சாவித்ரி/வாணி ஜெயராம். மிகவும் ரசித்த பாடல்களில் இதுவும் ஒன்று. YOUTUBE-ல் தரவேற்றம் செய்து இருக்கும் CRAMSINGAPORE என்ற நண்பருக்கும் நன்றி!



காஞ்சி பட்டுடுத்தி கஸ்தூரி பொட்டு வைத்து
தேவதைபோல் நீ நடந்து வரவேண்டும்
ஆ…..ஆ….ஓஹோ ஓஹோ ஓஹோஹோ…

காஞ்சி பட்டுடுத்தி கஸ்தூரி பொட்டு வைத்து
தேவதைபோல் நீ நடந்து வரவேண்டும்
நா..நா…நன நன நனன ந….

காஞ்சி பட்டுடுத்தி கஸ்தூரி பொட்டு வைத்து
தேவதைபோல் நீ நடந்து வரவேண்டும்
அந்த திருமகளும் உன் அழகைப் பெறவேண்டும்…
திருமகளும் உன் அழகை பெறவேண்டும்

தென் குமரி கடலினிலே சிவந்த மாலை பொழுதினிலே
பெண்குமரி நீயும் நானும் ஆடுவோம்
அங்கு பேசாத கதைகள் எல்லாம் பேசுவோம்
ஆ…ஆ… ஆ….ஆ…..

தென் குமரி கடலினிலே சிவந்த மாலை பொழுதினிலே
பெண்குமரி நீயும் நானும் ஆடுவோம்
அங்கு பேசாத கதைகள் எல்லாம் பேசுவோம்
சந்தனம் பூசுவோம் செந்தமிழ் பாடுவோம்
சந்தனம் பூசுவோம் செந்தமிழ் பாடுவோம்
சந்தோஷ ஊஞ்சலிலே ஆடுவோம்
நாம் சந்தோஷ ஊஞ்சலிலே ஆடுவோம்
காஞ்சி பட்டுடுத்தி கஸ்தூரி பொட்டு வைத்து
தேவதைபோல் நீ நடந்து வரவேண்டும்
அந்த திருமகளும் உன் அழகைப் பெறவேண்டும்….

தேனருவி கரையினிலே திருக்குற்றால மலையினிலே
நீரருவி உடல் தழுவ குளிக்கணும்
நான் நெருங்கி வந்து உன் அழகை ரசிக்கணும்
குங்குமம் போலவே உன் முகம் மாறணும்
குங்குமம் போலவே உன் முகம் மாறணும்
பொய் கோபம் கொண்டு நீ விலகிப் போகணும்
பொய் கோபம் கொண்டு நீ விலகிப் போகணும்

காஞ்சி பட்டுடுத்தி கஸ்தூரி பொட்டு வைத்து
தேவதைபோல் நீ நடந்து வரவேண்டும்
அந்த திருமகளும் உன் அழகைப் பெறவேண்டும்

பூம்புகாரின் நாயகியாம் புனிதமுள்ள குணவதியாம்
கண்ணகி போல் நீ வாழ நினைக்கணும்
உன் கணவனுக்கு பெருமைகளைச் சேர்க்கணும்
ஆ… ஆ…ஆ…ஆஆ…

பூம்புகாரின் நாயகியாம் புனிதமுள்ள குணவதியாம்
கண்ணகி போல் நீ வாழ நினைக்கணும்
உன் கணவனுக்கு பெருமைகளைச் சேர்க்கணும்
மாமியார் வாழ்த்தணும் மற்றவர் போற்றணும்
மாமியார் வாழ்த்தணும் மற்றவர் போற்றணும்
மாநிலமே உன் புகழைப் பாடணும்
இந்த மாநிலமே உன் புகழைப் பாடணும்
இந்த மாநிலமே உன் புகழைப் பாடணும்

காஞ்சி பட்டுடுத்தி கஸ்தூரி பொட்டு வைத்து
தேவதைபோல் நீ நடந்து வரவேண்டும்
அந்த திருமகளும் உன் அழகைப் பெறவேண்டும்…
திருமகளும் உன் அழகைப் பெறவேண்டும்


Tuesday 25 January 2011

பாரத சமுதாயம் வாழ்கவே…..



நாளை இந்தியாவின் குடியரசு தினம்.  1950-ல் குடியரசு நாடாகிய இந்தியா இன்று 2011-ல் எப்படி இருக்கிறது என்பதை நாம் அறிவோம்.  பெரும்பாலான அரசியல்வாதிகள் பித்தலாட்டமும் சுரண்டல்வாதிகளுமாய் இருக்கின்றனர்.  பாரதி இன்று இருந்தால் என்ன பாடி இருப்பாரோ தெரியவில்லை.  குடியரசு தினம் முன்னிட்டு இந்த வலைப்பூவில் பாரதி படத்தில் இருந்து கானகந்தர்வன் கே.ஜே. யேசுதாஸ் அவர்களின் குரலில் இசைஞானி இளையராஜாவின் இசையில் “பாரத சமுதாயம் வாழ்கவே” நான் ரசித்த பாடல் உங்களுக்காய்!


Get Your Own Hindi Songs Player at Music Plugin

பாரத சமுதாயம் வாழ்கவேவாழ்க வாழ்க
பாரத சமுதாயம் வாழ்கவே
பாரத சமுதாயம் வாழ்கவேவாழ்க வாழ்க
பாரத சமுதாயம் வாழ்கவே

முப்பது கோடி ஜனங்களின் சங்கம்
முழுமைக்கும் பொது உடைமை
முப்பது கோடி ஜனங்களின் சங்கம்
முழுமைக்கும் பொது உடைமை
ஒப்பிலாத சமுதாயம்
உலகத்துக்கொரு புதுமை
ஒப்பிலாத சமுதாயம்
உலகத்துக்கொரு புதுமை

பாரத சமுதாயம் வாழ்கவேவாழ்க வாழ்க
பாரத சமுதாயம் வாழ்கவே
பாரத சமுதாயம் வாழ்கவேவாழ்க வாழ்க
பாரத சமுதாயம் வாழ்கவே

முப்பது கோடி ஜனங்களின் சங்கம்
முழுமைக்கும் பொது உடைமை
முப்பது கோடி ஜனங்களின் சங்கம்
முழுமைக்கும் பொது உடைமை
ஒப்பிலாத சமுதாயம்
உலகத்துக்கொரு புதுமை
ஒப்பிலாத சமுதாயம்
உலகத்துக்கொரு புதுமை

பாரத சமுதாயம் வாழ்கவேவாழ்க வாழ்க
பாரத சமுதாயம் வாழ்கவேஜய ஜய ஜய
பாரத சமுதாயம் வாழ்கவேவாழ்க வாழ்க
பாரத சமுதாயம் வாழ்கவே

மனிதர் உணவை மனிதர் பறிக்கும்
வழக்கம் இனியுண்டோ?
மனிதர் நோக மனிதர் பார்க்கும்
வாழ்க்கை இனியுண்டோபுலனில்
வாழ்க்கை இனியுண்டோநம்மிலந்த
வாழ்க்கை இனியுண்டோ

இனிய பொழில்கள் நெடிய வயல்கள்
எண்ணரும் பெருநாடு,
இனிய பொழில்கள் நெடிய வயல்கள்
எண்ணரும் பெருநாடு,

கனியும் கிழங்கும் தானியங்களும்
கணக்கின்றித் தரு நாடுஇது
கணக்கின்றித் தரு நாடு
நித்த நித்தம் கணக்கின்றித் தரு நாடு

இனியொரு விதிசெய் வோம்
அதை எந்த நாளும் காப்போம்,
இனியொரு விதிசெய் வோம்
அதை எந்த நாளும் காப்போம்,
தனியொருவனுக் குணவில்லையெனில்
ஜகத்தினை அழித்திடு வோம்
ஜகத்தினை அழித்திடு வோம்

பாரத சமுதாயம் வாழ்கவேவாழ்க வாழ்க
பாரத சமுதாயம் வாழ்கவேஜய ஜய ஜய
பாரத சமுதாயம் வாழ்கவேவாழ்க வாழ்க
பாரத சமுதாயம் வாழ்கவே
முப்பது கோடி ஜனங்களின் சங்கம்
முழுமைக்கும் பொது உடைமை
முப்பது கோடி ஜனங்களின் சங்கம்
முழுமைக்கும் பொது உடைமை
ஒப்பிலாத சமுதாயம்
உலகத்துக்கொரு புதுமை
ஒப்பிலாத சமுதாயம்
உலகத்துக்கொரு புதுமை

பாரத சமுதாயம் வாழ்கவேவாழ்க வாழ்க
பாரத சமுதாயம் வாழ்கவேஜய ஜய ஜய
பாரத சமுதாயம் வாழ்கவேவாழ்க வாழ்க
பாரத சமுதாயம் வாழ்கவே

Saturday 22 January 2011

காதல் மயக்கம்…..

புதுமைப் பெண் படத்தில் இருந்து இந்தப் பாடல். இளையராஜாவின் இன்னிசையில், பி. ஜெயச்சந்திரன் மற்றும் சுனந்தா ஆகியோரால் பாடப்பெற்றது இந்த இனிய பாடல்.  பாடலின் வரிகள் கவிஞர் வாலி அவர்கள் எழுதப்பெற்றது. அழகான ஒரு காதல் கவிதையாய் இருக்கும் இந்தப் பாடல் நான் ரசிக்கும் பாடல்களில் ஒன்று.  ஜெயச்சந்திரன் அவர்கள் பாடிய பாடல்களில் இதுவும் எனக்குப் பிடித்த ஒன்று.  இந்தப் பாடலை YOUTUBE-ல் பகிர்ந்த ஜெகன்1987 அவர்களுக்கு நன்றி.

மீண்டும் வேறு ஒரு பாடலோடு சந்திக்கும் வரை…

ஆதி


 
காதல் மயக்கம்…. அழகிய கண்கள் துடிக்கும்
இது ஒரு காதல் மயக்கம் அழகிய கண்கள் துடிக்கும்
ஆலிங்கனங்கள் பரவசம் இங்கு அனுமதி இலவசம்

தன்னை மறந்த அனுபவம் ரெண்டு கண்களின் அபிநயம்
தேகம் கொஞ்சம் சிலிர்க்கின்றதே
மேகம் போல மிதக்கின்றதே
மெழுகாய் உருகும் அழகே ஒரு
காதல் மயக்கம் அழகிய கண்கள் துடிக்கும்

நான் தூங்கும் வேளை கனவுகள் தொல்லை……
நான் தூங்க வில்லை கனவுகள் இல்லை
மெய்யா பொய்யா?
மெய்தான் அய்யா
நான் தூங்க வில்லை கனவுகள் இல்லை
மெய்யா பொய்யா?
மெய்தான் அய்யா
பாதத்தில் வீழ்ந்த பௌர்ணமியே
மார்பினை தீண்டு மார்கழியே
பட்டும் படாமல் தொட்டும் தொடாமல்
என் பெண்மை திண்டாடும் உன்னோடு மன்றாடும்

காதல் மயக்கம்…. அழகிய கண்கள் துடிக்கும்
ஆலிங்கனங்கள் பரவசம் இங்கு அனுமதி இலவசம்
தன்னை மறந்த அனுபவம் ரெண்டு கண்களின் அபிநயம்

தேகம் கொஞ்சம் சிலிர்க்கின்றதே
மேகம் போல மிதக்கின்றதே
மெழுகாய் உருகும் அழகே
ஒரு காதல் மயக்கம்
அழகிய கண்கள் துடிக்கும்

உன் வார்த்தைதானே நான் சொல்லும் வேதம்…….
உன் பேரை சொன்னால் ஆயுளும் கூடும்
போதும் கேலி
வா வா தேவி
உன் பேரை சொன்னால் ஆயுளும் கூடும்
போதும் கேலி
வா வா தேவி
கண்களில் ஒன்று பார்க்கின்றது
உன்னிடம் தேதி கேட்கின்றது
மாலை வழங்கும் நேரம் நெருங்கும்
நான் வந்து பெண் பார்க்க
நீ அன்று மண் பார்க்க
காதல் மயக்கம்…. அழகிய கண்கள் துடிக்கும்
ஆலிங்கனங்கள் பரவசம் இங்கு அனுமதி இலவசம்
தன்னை மறந்த அனுபவம் ரெண்டு கண்களின் அபிநயம்
தேகம் கொஞ்சம் சிலிர்க்கின்றதே
மேகம் போல மிதக்கின்றதே
மெழுகாய் உருகும் அழகே
ஒரு காதல் மயக்கம்

அழகிய கண்கள் துடிக்கும்….

Thursday 20 January 2011

குன்றத்திலே குமரனுக்குக் கொண்டாட்டம்


இன்று தைப்பூசத் திருநாள்.  முருகனின் அறுபடை வீடுகளிலும் தைப்பூசத் திருநாள் மிகவும் விமரிசையாகக் கொண்டாடப்படும்.  தில்லியில் கூட மிகவும் பழமையான ஆர்.கே. புரம் மலைக்கோவிலிலும் காவடிகள், பால் குடங்கள் எடுத்து பக்தர்கள் இதனைக் கொண்டாடுவர்.  தைப்பூசத் திருநாளில் நான் ரசித்த பாடலாய் கவிஞர் கண்ணதாசன் அவர்களால் எழுதப்பட்டு குன்னக்குடி வைத்தியநாதன் அவர்களால் இசையமைக்கப்ப்ட்டு 1971-ஆம் வருடம் வெளிவந்த தெய்வம் படத்தில் இடம்பெற்ற “குன்றத்திலே குமரனுக்குக் கொண்டாட்டம்” பாடல் உங்கள் ரசனைக்காய்.  இந்த பாடலைப் பாடியவர் பெங்களூர் ரமணி அம்மாள்.  பாடலை YOUTUBE-ல் பகிர்ந்திருக்கும் ISTREAMINDIA-விற்கு நன்றி.


குன்றத்திலே குமரனுக்குக் கொண்டாட்டம்
அங்கே குவிந்ததம்மா பெண்களெல்லாம்
வண்டாட்டம் கொண்டாட்டம்
குன்றத்திலே குமரனுக்குக் கொண்டாட்டம்
அங்கே குவிந்ததம்மா பெண்களெல்லாம்
வண்டாட்டம் கொண்டாட்டம்
குன்றத்திலே குமரனுக்குக் கொண்டாட்டம்

தெய்வயானை திருமணமாம் திருப்பார்க்குன்றம்
      தெய்வயானை திருமணமாம் திருப்பார்க்குன்றம்
தெருமுழுதும் பக்தர்களில் ஆனந்தமன்றம்
      தெருமுழுதும் பக்தர்களில் ஆனந்தமன்றம்
தங்கம் வைரம் பவழம் முத்து தவழும் தெய்வானை
தங்கம் வைரம் பவழம் முத்து தவழும் தெய்வானை
தாங்கிக் கொண்டாள் வாங்கிக்கொண்டாள் முருகப்பெம்மானை
      தாங்கிக் கொண்டாள் வாங்கிக்கொண்டாள் முருகப்பெம்மானை
      முருகப் பெம்மானை

குன்றத்திலே குமரனுக்குக் கொண்டாட்டம்
அங்கே குவிந்ததம்மா பெண்களெல்லாம்
வண்டாட்டம் கொண்டாட்டம்
குன்றத்திலே குமரனுக்குக் கொண்டாட்டம்

உருகிச் சொல்லுங்கள் முருகனின் பேரை
நெருங்கிச் செல்லுங்கள் குமரனின் ஊரை
உருகிச் சொல்லுங்கள் முருகனின் பேரை
நெருங்கிச் செல்லுங்கள் குமரனின் ஊரை

வேல் முருகா… வெற்றி வேல் முருகா
வேல் முருகா… வெற்றி வேல் முருகா

சந்தனம் பூசுங்கள் குங்குமம் சூடுங்கள்
      சந்தனம் பூசுங்கள் குங்குமம் சூடுங்கள்
அரஹர பாடுங்கள்… வருவதைப் பாருங்கள்
      அரஹர பாடுங்கள்… வருவதைப் பாருங்கள்

கந்தனுக்கு வேல் வேல்
      முருகனுக்கு வேல் வேல்
கந்தனுக்கு வேல் வேல்
      முருகனுக்கு வேல் வேல்
கந்தனுக்கு வேல் வேல்
      முருகனுக்கு வேல் வேல்
கந்தனுக்கு வேல் வேல்
      முருகனுக்கு வேல் வேல்

வேல் முருகா…. [அரோகரா….. வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா]
வெற்றி வேல் முருகா
வேல் முருகா…. வெற்றி வேல் முருகா
வேல் முருகா…. வெற்றி வேல் முருகா
வேல் முருகா…. வெற்றி வேல் முருகா

Tuesday 18 January 2011

ராசாவே உன்ன நான் எண்ணித்தான்

தனிக்காட்டு ராஜா படத்திலிருந்து “ராசாவே உன்ன நான்” பாடல் நான் ரசித்த பாடல்களில் ஒன்று.  ரஜினிகாந்த், ஸ்ரீப்ரியா நடிப்பில் இளையராஜா இசையில் கலக்கியிருப்பார்.  எஸ்.பி. ஷைலஜாவின் இனிய குரலில் ஒலிக்கும் இப்பாடல் அவரது பாடல்களிலேயே மிகவும் பிரபலமான ஒன்று.  ரஜினி, ஸ்ரீப்ரியா கையைப் பிடித்துக்கொண்டு ஒற்றைக்காலில் ஒரு சுற்று சுற்றி நடனம் ஆடுவார் பாருங்கள், சூப்பர் போங்க! ரஜினியின் நடனம் பிடிக்காதவர்கள் [!] கண்ணை மூடிக்கொண்டு ரசிக்கலாம்!  ஆனால் என்ன அருமையான அருவி, நதி போன்ற இயற்கைக்காட்சிகள், அழகிய காட்சியமைப்பு போன்றவற்றை நீங்கள் இழக்க நேரிடும்.  அதற்கு கண்ணைத் திறந்தபடி பாடலை ரசியுங்களேன்.  காணொளியை YOUTUBE-ல் பதிவு செய்து வைத்திருக்கும் ARSARA அவர்களுக்கு நன்றி.


ஆடியோ மட்டும் கேட்க விரும்புவர்களுக்கு:


Get Your Own Hindi Songs Player at Music Plugin





ராசாவே உன்ன நான் எண்ணித்தான்
பல ராத்திரி மூடல கண்ணத்தான்
பூ வச்சேன் பொட்டும் வச்சேன் வாழத்தான்
நான் பூவோடு நாரப்போல சேரத்தான்

ராசாவே உன்ன நான் எண்ணித்தான்
பல ராத்திரி மூடல கண்ணத்தான்
பூ வச்சேன் பொட்டும் வச்சேன் வாழத்தான்
நான் பூவோடு நாரப்போல சேரத்தான்
ராசாவே ராசாவே ராசாவே…….

ஆவாரம்பூவு அதுக்கொரு நோவு
உன்ன நெனச்சு உசிருருக்கு
ஆவாரம்பூவு அதுக்கொரு நோவு
உன்ன நெனச்சு உசிருருக்கு
ஆகாயம் பூமி ஆண்டவன் சாட்சி
ஆகாயம் பூமி ஆண்டவன் சாட்சி
பூத்தது வாடுது நீ வரத்தான்

ராசாவே உன்ன நான் எண்ணித்தான்
பல ராத்திரி மூடல கண்ணத்தான்
ஏ பூ வச்சேன் பொட்டும் வச்சேன் வாழத்தான்
நான் பூவோடு நாரப்போல சேரத்தான்

மாக்கோலம் போட்டு மாவிளக்கேத்தி
நீ கெடைக்க நேந்துகிட்டேன்
மாக்கோலம் போட்டு மாவெளக்கேத்தி
நீ கெடைக்க நேந்துகிட்டேன்
பாத்தாளே ஆத்தா மனக்குற தீத்தா
பாத்தாளே ஆத்தா மனக்குற தீத்தா
கெடச்சது மாலையும் மஞ்சளும்தான்

ராசாவே உன்ன நான் எண்ணித்தான்
பல ராத்திரி மூடல கண்ணத்தான்
ஏ பூ வச்சேன் பொட்டும் வச்சேன் வாழத்தான்
நான் பூவோடு நாரப்போல சேரத்தான்
ராசாவே ராசாவே ராசாவே…….



Wednesday 12 January 2011

வரவு எட்டணா செலவு பத்தணா

பாமா விஜயம் படத்தில், பாலையா, மேஜர் சுந்தர்ராஜன், முத்துராமன், நாகேஷ், சௌகார் ஜானகி, காஞ்சனா, ஜெயந்தி என்று ஒரு பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்திருக்கும். இந்த படத்தில் வரும் ”வரவு எட்டணா செலவு பத்தணா” என்ற இந்தப் பாடல் எல்லாக்காலத்திற்கும் பொருந்தும் இல்லையா?  நகைச்சுவை கலந்து உண்மையை விளக்கும் இந்தப்பாடல் இதோ உங்களுக்காகக் காணொளியாய்GOOGLE VIDEOS-க்கு நன்றி. 



வரவு எட்டணா செலவு பத்தணா அதிகம் ரெண்டணா
கடைசியில் துந்தணா.. 
வரவு எட்டணா செலவு பத்தணா அதிகம் ரெண்டணா
கடைசியில் துந்தணா துந்தணா துந்தணா ஆஆஆஆ

1 2 3 4 5 6 7 8 ம்ம்ம்ம்ம்ம்ம்ம் 

வரவு எட்டணா செலவு பத்தணா அதிகம் ரெண்டணா
கடைசியில் துந்தணா துந்தணா துந்தணா

நிலைமைக்கு மேலே நினைப்பு வந்தால் நிம்மதி இருக்காது
      அய்யா நிம்மதி இருக்காது
அளவுக்கு மேலே ஆசையும் வந்தால் உள்ளதும் நிலைக்காது
      அம்மா உள்ளதும் நிலைக்காது

வயசுக்கு மேலே உலகத்தில் உள்ள நல்லது பிடிக்காது
மாமா நல்லது பிடிக்காது
வயசுக்கு மேலே உலகத்தில் உள்ள நல்லது பிடிக்காது
மாமா நல்லது பிடிக்காது
வயசு பிள்ளைகள் புதுசா பெருசா வாழ்வது பொருக்காது
அப்பா வாழ்வது பொருக்காது
வயசு பிள்ளைகள் புதுசா பெருசா வாழ்வது பொருக்காது
அப்பா வாழ்வது பொருக்காது

வாடகை சோபா
இருவது ரூபா
விலைக்கு வாங்கினா
      முப்பதே ரூபா

வாடகை சோபா இருவது ரூபா
விலைக்கு வாங்கினா முப்பதே ரூபா

வரவு எட்டணா செலவு பத்தணா அதிகம் ரெண்டணா
கடைசியில் துந்தணா துந்தணா துந்தணா

அடங்கா மனைவி அடிமை புருஷன் குடும்பத்துக்காகாது
அடங்கா மனைவி அடிமை புருஷன் குடும்பத்துக்காகாது
      அய்யா குடும்பத்துக்காகாது
யானையைப் போலே பூனையும் தின்னா ஜீரணமாகாது
      அய்யா ஜீரணமாகாது
யானையைப் போலே பூனையும் தின்னா ஜீரணமாகாது
அய்யா ஜீரணமாகாது

பச்சைக்கிளிகள் பறப்பதை பார்த்தா பருந்துக்கு பிடிக்காது
அப்பா பருந்துக்குப் பிடிக்காது
பச்சைக்கிளிகள் பறப்பதை பார்த்தா பருந்துக்கு பிடிக்காது
அப்பா பருந்துக்குப் பிடிக்காது

பணத்தைப் பார்த்தால் கௌரவம் என்பது மருந்துக்கும் இருக்காது
மாமா மருந்துக்கும் இருக்காது
பணத்தைப் பார்த்தால் கௌரவம் என்பது மருந்துக்கும் இருக்காது
மாமா மருந்துக்கும் இருக்காது

தங்கச் சங்கிலி இரவல் வாங்கினா
      தவறிப் போச்சுன்னா தகிட தந்தனா
ஹேஹேஹே

பாமா விஜயம் கிருஷ்ணனுக்காக இங்கே எதுக்காக?

பாமா விஜயம் கிருஷ்ணனுக்காக இங்கே எதுக்காக?
      அய்யா இங்கே எதற்காக?
மாதர்கள் எல்லாம் கன்னியராக மாறணும் அதுக்காக
      அப்பா வேறே எதுக்காக
கன்னியராக மாறணமென்றால் பிள்ளைகள் எதற்காக
      அய்யா பிள்ளைகள் எதற்காக
காதல் செய்த பாவத்துக்காக வேறே எதுக்காக
      அப்பா வேறே எதுக்காக

பட்டால் தெரியும் பழசும் புதுசும்
      கேட்டால் தெரியும் கேள்வியும் பதிலும்

வரவு எட்டணா செலவு பத்தணா அதிகம் ரெண்டணா
கடைசியில் துந்தணா துந்தணா துந்தணா
வரவு எட்டணா செலவு பத்தணா அதிகம் ரெண்டணா
கடைசியில் துந்தணா துந்தணா துந்தணா



Monday 10 January 2011

கண்ணன் வருவான் கதை சொல்லுவான்


பஞ்சவர்ணக்கிளி படத்தில் இருந்து இந்த பாடல்.  பி. சுசீலா அவர்களின் குரலில், படத்திற்கு இசை அமைத்த ஜாம்பவான்கள் விஸ்வநாதன் – ராமமூர்த்தி.  நல்லதோர் தாலாட்டுப் பாடல்.  என்ன ஒரே பிரச்சனை – அழகான சுட்டிக் குழந்தைக்கு பதிலாய் நடுநடுவே முத்துராமன் – கண்ணன் ஆகி விடுகிறார் – கே.ஆர். விஜயாவின் நினைப்பில். காணொளியில் முதல் சில வரி வசனங்கள் இல்லை.  காணொளியை Youtube-ல் பதிந்து இருக்கும் peris0007 அவர்களுக்கு எனது நன்றி.





கண்ணா….

வா வா வா வா வா வா
கண்ணே வாடா கண்மணி வாடா
பொன்னே வாடா பொன்மணி வாடா

புன்னகை புரியும் கண்ணா வாடா…
புல்லாங்குழலின் மன்னா வாடா…
அழகே வாடா அருகே வாடா….
அன்பே வாடா…. முத்தம் தாடா…..

கண்ணன் வருவான் கதை சொல்லுவான்
வண்ணமலர் தொட்டில் கட்டி தாலாட்டுவான்
குழலெடுப்பான் பாட்டிசைப்பான்
வலம்புரிச் சங்கெடுத்து பாலூட்டுவான்
வலம்புரிச் சங்கெடுத்து பாலூட்டுவான்

கண்ணன் வருவான் கதை சொல்லுவான்
வண்ணமலர் தொட்டில் கட்டி தாலாட்டுவான்
குழலெடுப்பான் பாட்டிசைப்பான்
வலம்புரிச் சங்கெடுத்து பாலூட்டுவான்
வலம்புரிச் சங்கெடுத்து பாலூட்டுவான்

பச்சை வண்ணக்கிளி வந்து பழங்கொடுக்க
பட்டுவண்ணச் சிட்டு வந்து மலர் கொடுக்க

பச்சை வண்ணக்கிளி வந்து பழங்கொடுக்க
பட்டுவண்ணச் சிட்டு வந்து மலர் கொடுக்க
கன்னங் கருங்காக்கை வந்து மை கொடுக்க
கண்ணன் மட்டும் கன்னத்திலே முத்தம் கொடுக்க
முத்தம் கொடுக்க…
முத்தம் கொடுக்க…

தத்தித்தத்தி நடக்கையில் மயில்போலே
திக்கித்திக்கி பேசுகையில் குயில் போலே
கொஞ்சிக் கொஞ்சி எடுக்கையில் கொடி போலே
அஞ்சி அஞ்சி விழுவான் மடிமேலே

ஆரிரோ…. ஆரி ராரி ராரி ராரி ராராரோ
ஆரிரோ…. ஆரி ராரி ராரி ராரி ராரீரோ
ஆரி ராரி ராரி ராரி ஆராரோ
ஆரி ராரி ராரி ராரி ஆராரோ

கண்ணன் வருவான் கதை சொல்லுவான்
வண்ணமலர் தொட்டில் கட்டி தாலாட்டுவான்
குழலெடுப்பான் பாட்டிசைப்பான்
வலம்புரிச் சங்கெடுத்து பாலூட்டுவான்
வலம்புரிச் சங்கெடுத்து பாலூட்டுவான்

உனக்கென்றும் எனக்கென்றும் உறவு வைத்தான்
இருவரின் கணக்கிலும் வரவு வைத்தான்…

உனக்கென்றும் எனக்கென்றும் உறவு வைத்தான்
இருவரின் கணக்கிலும் வரவு வைத்தான்
ஒருவரின் குரலுக்கு மயங்க வைத்தான்
உண்மையை அதிலே உறங்க வைத்தான்
உறங்க வைத்தான்…
உறங்க வைத்தான்…

ஆரிரோ…. ஆரி ராரி ராரி ராரி  ராராரோ
ஆராரோ…. ஆரி ராரி ராரி ராரி ராரீரோ
ஆரி ராரி ராரி ராரி ஆராரோ
ஆரி ராரி ராரி ராரி ஆராரோ

கண்ணன் வருவான் கதை சொல்லுவான்
வண்ணமலர் தொட்டில் கட்டி தாலாட்டுவான்
குழலெடுப்பான் பாட்டிசைப்பான்
வலம்புரிச் சங்கெடுத்து பாலூட்டுவான்
வலம்புரிச் சங்கெடுத்து பாலூட்டுவான்