1979 ஆம் ஆண்டில் இளையராஜா அவர்களின் இசையில், எஸ்.பி.பியின் குரலில்
மற்றுமொரு அருமையான பாடல். நீங்களும் பார்த்து, கேட்டு ரசியுங்கள்.
வேறு நல்ல பாடலுடன் சந்திக்கும் வரை,
வெங்கட்.
படம் – பூந்தளிர்
இசை – இளையராஜா
பாடியவர் – எஸ்.பி.பாலசுப்ரமணியம்
நடித்தவர்கள் – சிவக்குமார், சுஜாதா
படம் வெளிவந்த வருடம் – 1979
பாடல் வரிகள் – பஞ்சு அருணாசலம்
வா பொன்மயிலே
நெஞ்சம் ஏக்கத்தில் தவிக்குது
என்றும் நீயின்றி நானில்லை
நானின்றி நீயில்லை.
கண்மணி…..
வா பொன்மயிலே
நெஞ்சம் ஏக்கத்தில் தவிக்குது
காதலின் ஜாடையெல்லாம் கண்ணழகிலே
கோவிலின் தேரழகோ முன்னழகிலே
கனியே மனம் மயங்க மயங்க
வருவாய் சுவை பெருகப் பெருக
இளமையின் நளினமே
இனிமையின் உறவும் மலர
வா பொன்மயிலே
நெஞ்சம் ஏக்கத்தில் தவிக்குது
என்றும் நீயின்றி நானில்லை
நானின்றி நீயில்லை.
கண்மணி…
வா பொன்மயிலே
நெஞ்சம் ஏக்கத்தில் தவிக்குது
மேனியின் மஞ்சள் நிறம்
வானளந்ததோ
பூமியின் நீல நிறம்
கண்ணளந்ததோ
அழகே சுகம் வளர வளர
நினைவே தினம் பழகப் பழக
உரிமையில் அழைக்கிறேன்
உயிரிலே கலந்து மகிழ
வா பொன்மயிலே
நெஞ்சம் ஏக்கத்தில் தவிக்குது
என்றும் நீயின்றி நானில்லை
நானின்றி நீயில்லை.
கண்மணி….
வா பொன்மயிலே
நெஞ்சம் ஏக்கத்தில் தவிக்குது
//வா பொன்மயிலே
ReplyDeleteநெஞ்சம் ஏக்கத்தில் தவிக்குது
என்றும் நீயின்றி நானில்லை
நானின்றி நீயில்லை.
கண்மணி…
வா பொன்மயிலே
நெஞ்சம் ஏக்கத்தில் தவிக்குது//
;))))))
இனிமை..
ReplyDeleteஇனிமையான பாடல் பக்ர்வுக்கு நன்றி
ReplyDeleteஅருமையான பாடல். பகிர்வுக்கு பாராட்டுக்கள்..
ReplyDeleteவாங்க வை.கோபாலகிருஷ்ணன் சார்,
ReplyDeleteநன்றி.
வாங்க முத்துலெட்சுமி,
நன்றிங்க.
வாங்க லஷ்மிம்மா,
நன்றி.
வாங்க இராஜராஜேஸ்வரி,
நன்றிங்க.