Friday, 10 February 2012

அடடட மாமரக்கிளியே…………….



சிட்டுக்குருவி படத்தில் வரும் இந்த பாடலை ஜானகியம்மா அற்புதமாக பாடியிருப்பார். இளையராஜா அவர்களின் இசையில் இனிமையான பாடல். நீங்களும் கேட்டு ரசியுங்களேன்….

மீண்டும் வேறு ஒரு நல்ல பாடலுடன் சந்திக்கும் வரை,

ஆதி வெங்கட்.
புது தில்லி.

படம்:                          சிட்டுக்குருவி
பாடியவர்:                      எஸ்.ஜானகி
இசை:                         இளையராஜா
நடித்தவர்கள்:                  சிவக்குமார், சுமித்ரா
பாடலை எழுதியவர்:           வாலி
படம் வெளிவந்த வருடம்:      1978



அடடட மாமரக்கிளியே
உன்னையின்னும் நான் மறக்கலையே
அடடட மாமரக்கிளியே
உன்னையின்னும் நான் மறக்கலையே
ரெண்டு நாளா உன்னையெண்ணி
பச்ச தண்ணி குடிக்கலையே
அடடட மாமரக்கிளியே ஏ ஏ ஏ…………

உன்னை நினைச்சே மஞ்சள் அரைச்சேன்
மாசக்கணக்கா பூசிக் குளிச்சேன்
அட என்னாட்டம் ராசாத்தி எவ இருக்கா சொல்லு
உன்னை நினைச்சே மஞ்சள் அரைச்சேன்
மாசக்கணக்கா பூசிக் குளிச்சேன்
அட என்னாட்டம் ராசாத்தி எவ இருக்கா சொல்லு

அடடட மாதுளங்கனியே
இதை இன்னும் நீ நினைக்கலியே
கிட்டவாயேன் கொத்திப்போயேன் – உன்ன
நான் தடுக்கலையே
மறுக்கலையே

அடடட மாமரக்கிளியே
உன்னையின்னும் நான் மறக்கலையே
ரெண்டு நாளா உன்னையெண்ணி
பச்ச தண்ணி குடிக்கலையே
அடடட மாமரக்கிளியே

உப்பு கலந்தா கஞ்சி இனிக்கும்
ஒன்னக் கலந்தா நெஞ்சு இனிக்கும் – அட
பரிசம் தான் போட்டாச்சு பாக்கு மாத்தியாச்சு
உப்பு கலந்தா கஞ்சி இனிக்கும்
ஒன்னக் கலந்தா நெஞ்சு இனிக்கும் – அட
பரிசம் தான் போட்டாச்சு பாக்கு மாத்தியாச்சு

அடடட தாமரைக்கொடியே
இது ஓந்தோள் தொடவில்லையே
செல்லக்கண்ணு சின்னப்பொண்ணு
இதை நீ நினைக்கலையே
அணைக்கலையே

அடடட மாமரக்கிளியே
உன்னையின்னும் நான் மறக்கலையே
ரெண்டு நாளா உன்னையெண்ணி
பச்ச தண்ணி குடிக்கலையே
அடடட மாமரக்கிளியே

மீனைப்புடிக்க தூண்டி இருக்கு
நீரைப்புடிக்க தோண்டி இருக்கு – அட
உன்னைத்தான் நான் பிடிக்க
கண்வலையை போட்டேன்

அடடட மம்முதக்கணையே
வந்து வந்து மயக்குது எனையே
இந்த ஏக்கம் ஏது தூக்கம்
பாயைப் போட்டு படுக்கலையே
புடிக்கலையே

அடடட மாமரக்கிளியே
உன்னையின்னும் நான் மறக்கலையே
ரெண்டு நாளா உன்னையெண்ணி
பச்ச தண்ணி குடிக்கலையே
அடடட மாமரக்கிளியே ஏ ஏ ஏ………………..

10 comments:

  1. அடடட மாமரக்கிளியே
    உன்னையின்னும் நான் மறக்கலையே

    மறக்கமுடியாத அற்புதப் பாடல் விரிகள்..
    பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

    ReplyDelete
    Replies
    1. பழையபாடல்களில் என்ன அர்த்தமுள்ள வரிகள் ரசிக்க எவ்வளவு நல்லா இருக்கு. வாலி சூப்பரா பாட்டு எழுதி இருக்கார்.

      Delete
  2. பகிர்விற்கு நன்றி

    ReplyDelete
  3. வாங்க இராஜராஜேஸ்வரி,

    நன்றிங்க.

    வாங்க லஷ்மிம்மா,

    நன்றி.

    வாங்க ஆச்சி,

    நன்றிப்பா.

    ReplyDelete
  4. இனிய தமிழ் மொழியை
    இனம் புரியாது உருக்குலைத்து

    இதுவும் தமிழ் பாடல் தானா என்று
    இரங்கிக்கிடக்கும் வேளையிலே

    அன்றைய நாள் பாடலொன்றை
    அழகான கிராமக் கவிதை ஒன்றை
    இளையராஜாவின் இன்னிசையில்

    கேட்டு மகிழும் நிகழ்வு ஒன்றே
    காதல் தினப் பரிசாக, இந்த‌
    கிழவன் கிழவி பெறும் ஒன்றாம

    சுப்பு ரத்தினம்.

    ReplyDelete
  5. வாங்க சுப்புரத்தினம் ஐயா,

    மிக்க நன்றி.

    ReplyDelete
  6. இந்த அழகான பாடல் எனக்கு இன்னுமொரு மாமரத்து வண்டு பாடலை நினைவுக்கு கொண்டு வந்தது.;-)
    சுப்புரத்தினம ்அவர்களின் கவிதை ரசிக்கும்படி உள்ளது.

    நன்றி.

    ReplyDelete
  7. வாங்க வெற்றிமகள்,

    மிக்க நன்றிங்க.

    ReplyDelete
  8. இந்த பாடல் ஜானகி பாடியதில்லை. புது பாடகி பாடியது...பெயர் நினைவில் இல்லை ...தெரிந்தவர்கள் பதியவும்...

    ReplyDelete
  9. இந்த பாடல் ஜானகி பாடியதில்லை. புது பாடகி பாடியது...பெயர் நினைவில் இல்லை ...தெரிந்தவர்கள் பதியவும்...

    ReplyDelete