Thursday 20 January 2011

குன்றத்திலே குமரனுக்குக் கொண்டாட்டம்


இன்று தைப்பூசத் திருநாள்.  முருகனின் அறுபடை வீடுகளிலும் தைப்பூசத் திருநாள் மிகவும் விமரிசையாகக் கொண்டாடப்படும்.  தில்லியில் கூட மிகவும் பழமையான ஆர்.கே. புரம் மலைக்கோவிலிலும் காவடிகள், பால் குடங்கள் எடுத்து பக்தர்கள் இதனைக் கொண்டாடுவர்.  தைப்பூசத் திருநாளில் நான் ரசித்த பாடலாய் கவிஞர் கண்ணதாசன் அவர்களால் எழுதப்பட்டு குன்னக்குடி வைத்தியநாதன் அவர்களால் இசையமைக்கப்ப்ட்டு 1971-ஆம் வருடம் வெளிவந்த தெய்வம் படத்தில் இடம்பெற்ற “குன்றத்திலே குமரனுக்குக் கொண்டாட்டம்” பாடல் உங்கள் ரசனைக்காய்.  இந்த பாடலைப் பாடியவர் பெங்களூர் ரமணி அம்மாள்.  பாடலை YOUTUBE-ல் பகிர்ந்திருக்கும் ISTREAMINDIA-விற்கு நன்றி.


குன்றத்திலே குமரனுக்குக் கொண்டாட்டம்
அங்கே குவிந்ததம்மா பெண்களெல்லாம்
வண்டாட்டம் கொண்டாட்டம்
குன்றத்திலே குமரனுக்குக் கொண்டாட்டம்
அங்கே குவிந்ததம்மா பெண்களெல்லாம்
வண்டாட்டம் கொண்டாட்டம்
குன்றத்திலே குமரனுக்குக் கொண்டாட்டம்

தெய்வயானை திருமணமாம் திருப்பார்க்குன்றம்
      தெய்வயானை திருமணமாம் திருப்பார்க்குன்றம்
தெருமுழுதும் பக்தர்களில் ஆனந்தமன்றம்
      தெருமுழுதும் பக்தர்களில் ஆனந்தமன்றம்
தங்கம் வைரம் பவழம் முத்து தவழும் தெய்வானை
தங்கம் வைரம் பவழம் முத்து தவழும் தெய்வானை
தாங்கிக் கொண்டாள் வாங்கிக்கொண்டாள் முருகப்பெம்மானை
      தாங்கிக் கொண்டாள் வாங்கிக்கொண்டாள் முருகப்பெம்மானை
      முருகப் பெம்மானை

குன்றத்திலே குமரனுக்குக் கொண்டாட்டம்
அங்கே குவிந்ததம்மா பெண்களெல்லாம்
வண்டாட்டம் கொண்டாட்டம்
குன்றத்திலே குமரனுக்குக் கொண்டாட்டம்

உருகிச் சொல்லுங்கள் முருகனின் பேரை
நெருங்கிச் செல்லுங்கள் குமரனின் ஊரை
உருகிச் சொல்லுங்கள் முருகனின் பேரை
நெருங்கிச் செல்லுங்கள் குமரனின் ஊரை

வேல் முருகா… வெற்றி வேல் முருகா
வேல் முருகா… வெற்றி வேல் முருகா

சந்தனம் பூசுங்கள் குங்குமம் சூடுங்கள்
      சந்தனம் பூசுங்கள் குங்குமம் சூடுங்கள்
அரஹர பாடுங்கள்… வருவதைப் பாருங்கள்
      அரஹர பாடுங்கள்… வருவதைப் பாருங்கள்

கந்தனுக்கு வேல் வேல்
      முருகனுக்கு வேல் வேல்
கந்தனுக்கு வேல் வேல்
      முருகனுக்கு வேல் வேல்
கந்தனுக்கு வேல் வேல்
      முருகனுக்கு வேல் வேல்
கந்தனுக்கு வேல் வேல்
      முருகனுக்கு வேல் வேல்

வேல் முருகா…. [அரோகரா….. வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா]
வெற்றி வேல் முருகா
வேல் முருகா…. வெற்றி வேல் முருகா
வேல் முருகா…. வெற்றி வேல் முருகா
வேல் முருகா…. வெற்றி வேல் முருகா

6 comments:

  1. இப்பதான் இதை கேட்டுக் கொண்டு இருக்கிறேன்

    ReplyDelete
  2. தைப்பூசத்தை வரவேற்கும் விதமான, பக்திப் பரவச மூட்டும் நல்லதொரு பதிவு தான். கேட்டு மகிழ்ந்தோம். மிக்க நன்றி.

    ReplyDelete
  3. சன் நியூஸில் பார்த்தேன் பாதயாத்திரை பழனிக்கு எல்லாம்,பொருத்தமான பாடல்.

    ReplyDelete
  4. @@ எல்.கே.: மிக்க நன்றி.

    @@ வை. கோபாலகிருஷ்ணன்: மிக்க நன்றி சார்.

    @@ ஆசியா உமர்: மிக்க நன்றி சகோ.

    ReplyDelete
  5. கணீர் பாடலாச்சே..

    ReplyDelete
  6. ஆட்டம் போட வைக்கும் பாட்டு... பெங்களுர் ரமணியம்மா கச்சேரிகளிலும் இப்பாடலை குதுகலமாக பாடுவார்கள்..
    ஒரு தடவை பொள்ளாச்சி சுப்ரமணியசுவாமி கோவில் விழாவில் கலந்து பாடும் பொழுது...குன்றத்திலே குமரனுக்குக் கொண்டாட்டம்
    அங்கே குவிந்ததம்மா பெண்களெல்லாம்
    பெல் பாட்டம் பெல் பாட்டம் என்று கூட்டத்தை உற்சாகப்படுத்தினார்கள்....

    ReplyDelete