ஸ்ரீனிவாஸ் அவர்களின்
இனிமையான குரலுக்காகவும், அருமையான கருத்துள்ள பாடல் வரிகளுக்காகவும் இந்த பாடல்
எனக்கு மிகவும் பிடித்த பாடல். இதை நீங்களும் கேட்டு ரசியுங்களேன்……
படம் – சுமைதாங்கி
பாடியவர் – P.B.ஸ்ரீனிவாஸ்
நடித்தவர்கள் – ஜெமினி கணேசன், தேவிகா
படம் வெளி வந்த வருடம் – 1962
இசை – விஸ்வநாதன் ராமமூர்த்தி
பாடல் வரிகள் - கண்ணதாசன்
மனிதன் என்பவன் தெய்வமாகலாம்
மனிதன் என்பவன் தெய்வமாகலாம்
மனிதன் என்பவன் தெய்வமாகலாம்
வாரி வாரி வழங்கும் போது வள்ளல் ஆகலாம்
வாழை போல தன்னைத் தந்து தியாகி ஆகலாம்
உறுதியோடு மெழுகு போல ஒளியை வீசலாம்
மனிதன் என்பவன் தெய்வமாகலாம் தெய்வமாகலாம்
ஊருக்கு என்று வாழ்ந்த நெஞ்சம் சிலைகள் ஆகலாம்
உறவுக்கென்று விரிந்த உள்ளம் மலர்கள் ஆகலாம்
ஊருக்கு என்று வாழ்ந்த நெஞ்சம் சிலைகள் ஆகலாம்
உறவுக்கென்று விரிந்த உள்ளம் மலர்கள் ஆகலாம்
யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்
மனம் மனம் அது கோவிலாகலாம்
மனிதன் என்பவன் தெய்வமாகலாம்
மனிதன் என்பவன் தெய்வமாகலாம்
மனிதன் என்பவன் தெய்வமாகலாம்
மனமிருந்தால் பறவைக்கூட்டில் மான்கள் வாழலாம்
வழியிருந்தால் கடுகுக்குள்ளே மலையைக் காணலாம்
மனமிருந்தால் பறவைக்கூட்டில் மான்கள் வாழலாம்
வழியிருந்தால் கடுகுக்குள்ளே மலையைக் காணலாம்
துணிந்து விட்டால் தலையில் எந்த சுமையும் தாங்கலாம்
குணம் குணம் அது கோவிலாகலாம்
மனிதன் என்பவன் தெய்வமாகலாம்
வாரி வாரி வழங்கும் போது வள்ளல் ஆகலாம்
வாழை போல தன்னைத் தந்து தியாகி ஆகலாம்
உறுதியோடு மெழுகு போல ஒளியை வீசலாம்
மனிதன் என்பவன் தெய்வமாகலாம் தெய்வமாகலாம்
மீண்டும் சந்திப்போம்,
ஆதி வெங்கட்.
மிகவும் ரசிக்க்கவைத்த எனக்குப்பிடித்த பாடல் வரிகளின் பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..
ReplyDeleteநல்ல பாடல் பகிர்வுக்கு நன்றி
ReplyDeleteஅழகான பாடல். அநேகமாக எல்லோருக்குமே பிடிக்கும் தான். vgk
ReplyDeleteஅருமையான பாடல்
ReplyDeleteஇன்று
விஜய் ஏன் அதிகமாக எல்லா இடத்திலும் கலாய்க்கபடுகிறார்.
"வழியிருந்தால் கடுகுக்குள்ளே மலையைக் காணலாம்"
ReplyDeleteகாலத்தில் அழியாத பாடல். நன்றி. முதல் வரவு. பத்மாசூரி.