Tuesday, 20 December 2011

தென்றல் வந்து என்னைத்தொடும்……….



இந்த பாடலில் இளையராஜா அவர்களின் இசை நம்மை மயக்கும். நீங்களும் இதை கேட்டு பார்த்து ரசியுங்களேன்.

மீண்டும் சந்திக்கும் வரை,

ஆதி வெங்கட்.

திரைப்படம்: தென்றலே என்னைத் தொடு  
பாடகர்கள்: ஜேசுதாஸ், எஸ். ஜானகி.
இசை: இளையராஜா
பாடல் வரிகள் - வாலி 





தென்றல் வந்து என்னைத்தொடும் 
ஆஹா சத்தம் இன்றி முத்தமிடும்  
பகலே போய் விடு
இரவே பாய் கொடு  
நிலவே...  பன்னீரைத் தூவி ஓய்வெடு  

தென்றல் வந்து என்னைத் தொடும்
ஆஹா சத்தம் இன்றி முத்தமிடும்  

தூறல் போடும் இந்நேரம் தோளில் சாய்ந்தால் போதும்  
சாரல் பாடும் சங்கீதம் கால்கள் தாளம்... போடும்  
தெரிந்த பிறகு, திரைகள் எதற்கு
நனைந்த பிறகு நாணம் எதற்கு  
மார்பில் சாயும் போது 

தென்றல் வந்து என்னைத் தொடும்
ஆஹா சத்தம் இன்றி முத்தமிடும்  
பகலே போய் விடு
இரவே பாய் கொடு  
நிலவே...  பன்னீரைத் தூவி ஓய்வெடு  

தென்றல் வந்து என்னைத் தொடும்
ஆஹா சத்தம் இன்றி முத்தமிடும்  

தேகம் எங்கும் மின்சாரம் பாய்ந்ததேனோ அன்பே  
மோகம் வந்து என் மார்பில் வீழ்ந்ததேனோ கண்ணே  
மலர்ந்த கொடியோ... மயங்கி கிடக்கும்  
இதழின் ரசங்கள்.... எனக்குப் பிடிக்கும்....  
சாரம் ஊரும் நேரம்  


தென்றல் வந்து என்னைத் தொடும்
ஆஹா சத்தம் இன்றி முத்தமிடும்  
பகலே போய் விடு
இரவே பாய் கொடு  
நிலவே...  பன்னீரைத் தூவி ஓய்வெடு....

தென்றல் வந்து என்னைத் தொடும்
ஆஹா சத்தம் இன்றி முத்தமிடும்.... 


7 comments:

  1. தென்றலாய் வருடிய பாடல் பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

    ReplyDelete
  2. இந்தப்பக்கம் வந்தாலே மனதை மயாகும் பாடல்கள் கேக்கலாம். பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  3. அழகிய இந்தப் பாடல் தென்றலாய் வருடுது.
    பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  4. அருமையான படல்
    முழுவரியும் தெரிந்து கேட்கையில்
    இன்னும் சிறப்பாக இருக்கிறது
    பதிவாக்கித் தந்தமைக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. அடடடா! மறக்கமுடியுமா! நாங்கள் இரண்டு பேர் இரண்டாவது ஆட்டத்துக்கு இரண்டு சக்கர வண்டியில் படம் பார்க்கச் சென்று குறுக்கே வந்த போலிஸ்காரர் மேல் இடித்து விழுந்து, “என்னடா!ஒரு சைக்கிளில் நாலு பேரு போறிங்க”ன்னு அவரு எகிற, வியர்த்துப் போய் தியேட்டர்ல உட்கார்ந்தால்,இரண்டு மணி நேரம் தென்றல் வந்து ஜிலு ஜிலுன்னு தொட்டுச் சென்றதை மறக்க முடியுமா?

    ReplyDelete
  6. கருத்துரையிட்டு எங்களை உற்சாகப்படுத்திய
    இராஜராஜேஸ்வரி மேடம்
    லஷ்மிம்மா
    வை.கோபாலகிருஷ்ணன் சார்
    ரமணி சார்
    ஈஸ்வரன் சார்
    ஆகிய அனைவருக்கும் நன்றிகள்.

    ReplyDelete
  7. என்றும் திகட்டாத எத்தனை முறை கேட்டாலும் சலிப்பு தட்டாத பாடல்
    பகிர்விற்கு நன்றி !

    ReplyDelete